Loading...

Monday, July 10, 2017

தேங்காய் தரும் அழகு

சுவையான சமையல் என்றாலே தேங்காய் இல்லாமலா என்று எல்லோரும் சொல்லுவோம்.
தேங்காய் தரும் அழகு


இதே தேங்காய் தான் தலை முதல் பாதம் வரை நம் பளபளப்பை தாராளமாய் அள்ளித்தரும் என்றால் நம்புவீர்களா ???

வழுக்கை தேங்காயை நன்கு அரைத்து, அதனோடு சிறிதளவு இளநீர் கலந்து முகத்தில் கீழ் இருந்து மேல்நோக்கி பூசி, அது உலர்ந்ததும் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்துகொள்ள வேண்டும். தினமும் இவ்வாறு செய்து வந்தால் மாசு மருவின்றி முகம் மிளிரும் அத்தோடு கரும் புள்ளிகள் இருந்தால் விரைவில் இருந்த இடம் தெரியாமல் பறந்துவிடும்.

அதே நேரம் வெயில் காலங்களில் சூரியஒளி பட்டு முகம் கருமையடைவது இயல்பு . பலருக்கு வெளியூர் சென்றால்கூட இதுபோன்ற நிலை ஏற்படும். முகம் கருமையடைவதை தடுக்கவும் தேங்காய் உதவுகிறது. அதற்கு தேங்காய்ப் பால் 2 கரண்டி , கடலை மாவு ஒரு கரண்டி எடுத்து, இரண்டையும் கலந்து பசைபோல ஆக்கிக்கொள்ள வேண்டும். இந்த பசையை முகத்தில் பூசிக்கொண்டு, உலர்ந்ததும் தண்­ணீர் கொண்டு கழுவிவிட வேண்டும். வாரம் இருமுறை இப்படி செய்து வந்தால் முகம் பிரகாசமாகும் அதனால் உங்கள் மனமும் குளிரும்.

No comments:

Post a Comment